பெங்களூரு:

போர் பதற்றம் ஏற்படுத்துவதாக மோடி அரசை குற்றஞ்சாட்டியும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முகநூலில் பதிவிட்ட பேராசிரியர், பாஜகவினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.


போர் பதற்றம் ஏற்படுத்துவதாக பாஜக அரசை விமர்சித்தும், பதற்றம் ஏற்பட்டபோது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடந்து கொண்ட விதத்தைப் பாராட்டியும் முகநூலில் பேராசிரியர் சந்தீப் வாதர் பாராட்டியிருந்தார்.

மேலும் ஒரு பதிவில், இந்த பதற்றத்தை அறிவுப்பூர்வமானது என்று நீங்களா குரல் கொடுப்பது பக்தாஸ். போர் பதற்றத்தை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவது நீங்கள்தான். பாஜகவுக்கு வெட்கக்கேடு என்று குறிப்பிட்டிருந்தார்.

இவர் கர்நாடக உள்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீலுக்கு சொந்தமான டாக்டர் பிஹெச்.ஹலக்கட்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் மற்றம் டெக்னாலஜி கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

இந்த பதிவையடுத்து, கர்நாடக அகில பாரத வித்யார்த்த பரிஷத் மற்றும் பாஜகவினர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாகிஸ்தானுக்கு எதிராக பேசிய பேராசியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரினர்.
இதற்கிடையே பேராசிரியரை செவ்வாய்க் கிழமை சஸ்பெண்ட் செய்ய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், அகில பாரத வித்யார்த்த பரிஷத் மற்றும் பாஜகவினர் முன்பு மண்டியிட்டு பேராசிரியர் மன்னிப்பு கேட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

எனினும், முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை பேராசியர் சந்தீப் வாதர் இன்னும் நீக்கவில்லை.