சென்னை:

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் நியமனம் செய்துள்ள விசாரணை கமிஷன் அதிகாரி சந்தானம், மதுரை விருந்தினர் மாளிகையில் 3 நாட்கள் விசாரணை நடத்த இருப்பதாக கூறி உள்ளார்.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற அருப்புக்கோட்டை பேராசிரியை  நிர்மலா தேவி விவகாரத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை கவர்னர் மாளிகையும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித்,பேராசிரியை விவகாரம் குறித்து விசாரணை நடத்த  ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமனம் செய்தார். இது பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ள நிலையில், சந்தானம் இன்று மதுரை சென்றுள்ளார்.

இன்று  மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் சின்னையாவிடம்  விசாரணை நடத்திய சந்தானம், மேலும் 3 நாட் கள் மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணையை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்போது, மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசாரணை நடத்த இருப்பதாகவும் சந்தானம் கூறி உள்ளார்.