சென்னை: 

ண்ணா பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

இந்த சோதனையின்போது,  பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த  2013-16ம் ஆண்டில்  அண்ணா பல்கலை. துணைவேந்தராக ராஜாராம் இருந்தார். பதவி வகித்த போது, பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் அடிப்படையில் ராஜாராம் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அண்ண பல்கலைக்கழகத்தில்  கடந்த 3 நாட்களாக   தீவிர சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஏற்கனவே,  ராஜாராம் பயன்படுத்திய அறையிலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் அப்போது முறைகேடு தொடர்பாக ஆவணங்கள்  கைப்பற்றப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.