Random image

பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு: விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

விருதுநகர்:

ல்லூரி மாணவிகளுக்கு பண ஆசைக்காட்டி  தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணையை 24ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி விருதுநகர் நடுவர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி சார்பில  பலமுறை மனு தாக்கல் செய்தும், நீதிமன்றம்  அவருக்கு ஜாமின் வழங்க  மறுத்துவிட்டது. இந்த நிலையில், தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று நிர்மலாதேவி மற்றும் முருகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் போது மனுதாரர் சார்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை வரும் 24ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.