மதுரை:

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியது தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அகைக்கப்பட்டார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்த சந்தானம் கமிஷனும் தனியாக விசாரணை நடத்தியது.

இந்நிலையில் சந்தானம் மதுரையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கடந்த மாதம் 19ம் தேதி முதல் நடைபெற்ற விசாரணை இன்றுடன் முடிந்தது. பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. மே 15ம் தேதிக்குள் கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.