சென்னை:

ருப்புக்கோட்டை செங்குந்தர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை  லோக்கல் போலீசார் விசாரித்து வந்த நிலையில், விசாரணையை  சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தனது கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வர வலியுறுத்தி ஆசை காட்டிய பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்வதாக டிஜிபி ராஜேந்திரன் அறிவித்து உள்ளார்.

வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது நிர்மலாதேவியின் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை ஆய்வுசெய்த போலீசார் நிர்மலாதேவியுடன் விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த  உயர் அதிகாரிகள் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகவும், ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்களும் நிர்மலாதேவியின் செல்போனில் இருந்தாகவும் போலீசார் கூறியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், வழக்கை அருப்புக்கோட்டை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.