பேராசிரியை நிர்மலாதேவியின் நீதிமன்ற காவல் ஜூன் 6ந்தேதி வரை நீட்டிப்பு

விருதுநகர்:

ருப்புக்கோட்டை தேவாங்கர்  கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் ஜூன் 6ம் தேதி வரை நீட்டித்து விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதிக்கு திசைதிருப்ப முயன்று கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் மற்றும் கவர்னர் அமைத்த சந்தானம் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று விருதுநகர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் வரும் ஜுன் 6ம் தேதி வரை அதாவது மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.