Random image

ஆராய்ச்சியில் ஈடுபட்டால் மட்டுமே பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

சென்னை:

ல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் ஆராய்ச்சி போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண் டால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்,  ஆராய்ச்சிகளில் ஈடுபடாத பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு  வழங்கப்பட மாட்டாது என  அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பிரபலமான அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பொறியியல், கட்டடவியல் மேலாண்மை கல்லூரிகள் செயல்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு, இணை பேராசிரி யர்களாகவும்; இணை பேராசிரியர்களுக்கு, பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகின்றன. இதில்  அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் நடைமுறைகள் பின்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை உறுதிபடுத்தி உள்ள உயர்கல்வித் துறை,  இந்த ஆண்டு முதல், பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின் அடிப்படையில் மட்டுமே, பதவி உயர்வு வழங்க, அண்ணா பல்கலை முடிவு செய்து உள்ளது.

இது குறித்து, கடந்த வாரம், அண்ணா பல்கலையில் நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதையடுத்து, ’பதவி உயர்வுக்கு தகுதி பெறும், உதவி மற்றும் இணை பேராசிரியர்கள், பிஎச்.டி., என்ற ஆராய்ச்சி படிப்பில், குறைந்தபட்சம், ஒரு மாணவரையாவது உருவாக்க வேண்டும்.

’யு.ஜி.சி., அங்கீகரித்த பிரபலமான ஆய்வு இதழ்களில், குறைந்தபட்சம், இரண்டு ஆய்வு கட்டுரை கள் வெளி யிட்டிருக்க வேண்டும்’ என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

பதவி உயர்வுக்கு விண்ணப்பித்தோர் குறித்து, அண்ணா பல்கலை துணை வேந்தர் தலைமையிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, சுயமாக முடிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், 1,884 பேர், பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில், 600 பேருக்கு மட்டுமே, புதிய விதிகளின்படி பதவி உயர்வு கிடைக்கும் என, கூறப்படுகிறது.