மண்டலங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட பேருந்து போக்குவரத்துக்கு தடை… முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னை:
கொரோனா ஊரடங்கில் இருந்து ஏற்கனவே தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மண்டலங்களுள் இடையேயான போக்குவரத்து மீண்டும் தடை செய்யப்படுவதாக தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலாசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாலை 5 மணி அளவில் மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அப்போது, நாளையிலிருந்து மண்டலங்களுள் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவ தாக வும், போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படும்.  வேறு மாவட்டங்களுக்கு பயணிக்க வேண்டும் என்றால் இ-பாஸ் வாங்கிவிட்டுத்தான் செல்ல முடியும் என்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் இருந்து போக்குவரத்துக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு,  மண்டலங்களுக்கு இடையே போக்குவரத்து நடைபெற்று வந்தது. தற்போது அதை தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.