ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை ;   உயர்நீதிமன்ற கிளை உத்தரவு


 

சென்னை; ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகறார்கள். சமீபத்தில் அறிவித்து நூறு நாள் போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது கலவரம் மூண்டது. அப்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பதினோரு பேர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் பேராசிரியர் பாத்திமா, ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணியை நிர்வாகம் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

சற்று முன் இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர், அனிதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செயவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.