உள்ளாட்சி தேர்தல் வாக்குமுடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை:

ள்ளாட்சி தேர்தல் வாக்குமுடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை என்று கூறி உள்ளது.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 2ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சட்டப்பஞ்சாயத்து இயக்கம்  சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி முடிவுகளை அறிவிக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வாதங்களைத் தொடர்ந்து,  ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2 ஆம் தேதி நடத்த தடையில்லை என உத்தரவிட்ட  சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மனு தள்ளுபடி செய்துள்ளது.