திரைப்படத் தொழிலாளர்களுக்கு 6000-ம் வீடுகளுக்கான அடிக்கல்! ஆர்.கே.செல்வமணி

சென்னை:

திரைப்படத் தொழிலாளர்களுக்கு 6,000-ம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்வர் எடப்பாடியை அழைக்க இருப்பதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்து உள்ளார்

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளம் (ஃபெப்சி) சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை கடந்த 2018ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்து பேசும்போது, சினிமா கலைஞர்களுக்காக பையனூரில் 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதில் ஒருபகுதிதான் இந்த படப்பிடிப்பு தளம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, சினிமா கலைஞர்களுக்கு வீடு கட்டும்  திட்டம் இந்த மாதம் தொடங்கப்பட இருப்பதாகவும், அதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அழைக்க உள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளார்.