Random image

ஜூலி நடிக்கும் “அம்மன் தாயி” படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

`ம்மன் தாயி’ படத்தில் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார், ஜல்லிக்கட்டு புகழ்  ‘பிக்பாஸ்’ ஜூலி.  இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.

அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த  இந்த படத்தில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்த  ஜூலி, பின்னர்  `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெற்று மேலும் புகழ் பெற்றார். அதைத்தொடர்ந்து அம்மன் தாயி படம் கதாநாயகியாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

அவருக்க ஜோடியாக புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார்கள், மகேஸ்வரன்-சந்திரஹாசன். படத்துக்கு பாடல்கள் தேவர் குமாரவே எழுதியுள்ளார். டெரிக், ராஜ் மற்றும் கார்த்திக் இணைந்து இசையமைத்து வருகின்றனர். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது.

ப்ரோமோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…

https://www.youtube.com/watch?time_continue=44&v=UDLLQCdS19k