COVID-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்த புரோனிங் உதவுமா?

தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கும் COVID-19 நோயாளிகளின் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்த இந்த புரோனிங் நிலை உதவுகிறது என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். இதனால் இன்குபேட்டர் அல்லது வென்டிலேட்டர் உபயோகப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறைவதாகவும் கூறுகின்றனர்.

சென்னை: கோவிட் -19 இறப்புகளைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறிய மருத்துவர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். அதில்,  ‘புரோனிங்’ அத்தகைய ஒரு நுட்பமாக இருக்கலாம் என சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன்படி, மார்பு மற்றும் வயிறு கீழ்நோக்கி இருக்கும் கிளையில் குப்புறப்படுத்துக் கொள்ளுதல் ஆகும். தீவிர பாதிப்புள்ள நோயாளிகள் இவ்வாறு படுக்கும் போது அவர்களுடைய ஆக்ஸிஜன் ஓட்டம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுகாதார துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், சமீபத்தில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் இதைப் பின்பற்றி வருகின்றன. “நாங்கள் கே.எம்.சி மற்றும் ஆர்ஜிஜிஜிஎச் ஆகியவற்றில் உள்ள நோயாளிகளிடையே நல்ல முன்னேற்றத்தைக் காண்கிறோம். சென்னையின் இது மூத்த அலோபதி மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் செய்யப்படுகிறது,” என்று அவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். இந்த செயல்முறையை விளக்கிய, தொற்று நோய்கள் நிபுணர் கிளினிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் “புரோனிங் என்பது ஒரு பழைய நுட்பமாகும், இது பொதுவாக கடுமையான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.” என்றார்.

ஒரு நபர் புரோனிங் நிலையில் படுத்திருக்கும் போது புவியீர்ப்பு விசையின் காரணமாக, காற்று நுரையீரலினுள் காற்று-பையின் அடிபாகம் வரை நன்கு சென்று சேரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் உடலின் பிற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் சிறப்பாக விநியோகிக்கப்படுகிறது,” என்று டாக்டர் சுவாமிநாதன் கூறினார். COVID-19 பரவல் ஒன்றும் பேரழிவு அல்ல என்பதால், இது வென்டிலேட்டர் உதவி தேவையில்லாத நோயாளிகளுக்கு இந்த முறை ஓரளவு முன்னேற்றம் அளிக்கக் கூடும். மற்ற தனியார் மருத்துவமனைகளிலும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. மேலும் இது நல்ல பலனைக் கொடுத்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காவிரி மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர் மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் அனந்தா சுப்பிரமணியன் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 400 கோவிட் -19 நோயாளிகளில், குறைந்தது 60 முதல் 70 சதவீதம் பேர் சிகிச்சையின் போது புரோன் நிலையில் படுக்க வைக்கப்பட்டனர் என்றார். “இது 60 வயதிற்கு மேற்பட்ட பல நோயாளிகளுக்கும் சோதனை செய்யப்பட்டதில், நிச்சயமாக அவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைந்தனர்,” என்று அவர் கூறினார். டாக்டர் சுப்பிரமணியன் மேலும் கூறும்போது, “94 அல்லது அதற்குக் குறைவான ஆக்ஸிஜன் செறிவூட்டல் கொண்டவர்கள் புரோனிங் முறை செயல்படுத்தப்பட வேண்டியவர்கள் என்றும், ஹைஃபாக்ஸியா உள்ளவர்களும் இம்முறையில் சிகிச்சையளிக்கப்பட வேண்டியவர்கள்,” என்றும் கூறினார். ” முதுகெலும்பு பிரச்சினைகள், நரம்பியல் பலவீனம் மற்றும் அசௌகரியம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது,” என்று அவர் மேலும் கூறினார்.

அண்மையில், அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 65 மற்றும் 72 வயதுடைய கடுமையான சுவாசப் பிரச்சினைகள் கொண்டிருந்த ஐந்து நோயாளிகள் இந்த வழிமுறை பின்பற்றப்பட்ட பின்னர் பாதுகாப்பாக வீடு திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் செயல்திறனுக்கான முன்மாதிரியான சான்றுகள் வந்துக் கொண்டிருந்தாலும், இதன் வெற்றியைக் கோவிட் -19 நோயாளிகளில் காட்டும் வகையிலான கட்டுப்பட்டு குழுவைக் கொண்ட முறையான சோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை.

அமெரிக்காவின் ஜமா இன்டர்னல் நெட்வொர்க் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு சிறிய ஒருங்கிணைந்த ஆய்வில், 25 நோயாளிகள், இன்குபேட்டர் உதவி தேவைப்பட்ட  25 நோயாளிகளில் புரோனிங் முறையின் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், புரோனிங் முறையைக் கடைப்பிடித்த அனைவரில் 19 பேரின் ஆக்ஸிஜன் அளவு ஒரு மணி நேரத்திற்கு பிறகு 95 சதவீதத்திற்கு மேல் மேம்பட்டது, ஆறு நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவு மேம்படவில்லை. பின்னர், அந்த 19 பேரில் ஏழு பேருக்கு இன்குபேட்டர் தேவைப்பட்டது. அதேப்போல ஆக்சிஜன் அளவு மேம்படாத ஆறு பேரில் ஐந்து பேருக்கு இன்குபேட்டர் உதவி தேவைப்பட்டது. இறுதியாக, 25 பேரில் 12 பேருக்கு இன்குபேட்டர் உதவி தேவைப்பட்டது. அதில் மூவர் உயிரிழந்தனர்.

இந்தியாவில், ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் புரோனிங் குறித்து ஒரு பெரிய ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர், இது அக்டோபர் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், டாக்டர்கள் முன்னேற்றத்திற்காக அதை மட்டுமே நம்பியிருக்கக்கூடாது என்று கூறினர். ற்ற வகை சிகிச்சைகளையும் முயற்சிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். “சி.டி ஸ்கேன், ஸ்டீராய்டுகள் மற்றும் டோசிலிசுமாப்பின் பயன்பாடு போன்றவையும் வைரஸ் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று டாக்டர் சுவாமிநாதன் கூறினார்.

English: Omjasvin M D

Thank you: New Indian Express