சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரு அணிகள், திமுக, தேமுதிக,மார்க்சிய கம்யுனிஸ்டு,  நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி போன்ற அரசியல் கட்சியினர் மட்டுமின்றி ஏராளமான சுயேச்சைகளும் களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 127 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.  இடைத்தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது.

இந்நிலையில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்துப்பட்டியல் வெளியாகி உள்ளது.

டிடிவி தினகரன்: (அதிமுக-அம்மா)

 

தன‌க்கு 11 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், மனைவி பெயரில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் ‌இருப்பதாக, தினகரன் கூறியுள்ளார்.

மனைவி பெயரில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் வங்கி கடன் இருப்பதாகவும், தன் மீது பெரா உள்ளிட்ட 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 மதுசூதனன் (அதிமுக புரட்சித்தலைவி அம்மா)

மதுசூதனன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் , 18‌ லட்சத்து 89 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் 51 லட்சத்து 72 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் ம‌திப்பிலான அசையா சொத்துகளும், மனைவி பெயரில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தன் மீது வழக்குகள் எதுவும் இல்லை என்றும் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

 தீபா – (தீபா பேரவை)

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தனக்கு ரு.1 கோடி அளவிற்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், 2 கோடி அளவிற்கு அசையாத சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனுவில் கணவரின் பெயர் இல்லை என்று கூறப்படுகிறது.

மருதுகணேஷ்  (திமுக)

திமுக வேட்பாளர் மருது கணேஷின் சொத்து மதிப்பு ரூ.2,79,531 ஆகவும், அவருடைய மனைவி யின் சொத்து மதிப்பு ரூ.7,08,606 ஆகவும் உள்ளது.

மதிவாணன் (தேமுதிக)

தேமுதிக வேட்பாளர்,  லோகநாதன் தேமுதிக சார்பில் போட்டிடும் வேட்பாளர் மதிவாணன் சொத்து மதிப்பு ரூ.40.69 லட்சமாகவும்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதனின் சொத்து மதிப்பு ரூ.6.5 லட்சமாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.