தராபாத்திலிருக்கும் ஜெயலலிதவுக்கு சொந்தமான இலல்ததுக்கு  கடந்த இரண்டாண்டுகளாக சொத்துவரி செலுத்தாததால் அந்த மாநகராட்சி, குறிப்பிட்ட வீ்ட்டில் நோட்டீஸ்  ஒட்டியுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரைத்துறையில் பணியாற்றிய காலத்தில் செகந்தராபாத்தில் உள்ள ராதிகா காலனியில் வீடு வாங்கினார். கடந்த இரண்டாண்டுகளாக இந்த வீட்டுக்கான சொத்துவரி 34 ஆயிரத்து 424 ரூபாயை ஜெயலலிதா செலுத்தவில்லை. “இது குறித்து  பலமுறை நோட்டிஸ்  அனுப்பியும் அதை ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை”  என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது இந்த வீடு சசிகலா நடராஜன் பெயரில் இருப்பதாக கூறிய அதிகாரிகள், அதற்கான சொத்துவரி ரூ. 34,424-ஐ உடனே செலுத்தவேண்டும் என அந்த வீட்டில் ஒட்டப்பட்டிருப்பதாக கூறினர். இந்த இல்லம் சசிகலா பெயரில் இருப்பதால் அவருக்கும் நோட்டீஸ் அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.

இந்த வீட்டை வாங்கிய பிறகுதான் ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஜெயலலிதா ஏராளமான சொத்துகளை வாங்கினார்.

“ஜெ ஜெ தோட்டம்” என்ற பெயரில் தோட்டம், தனது தாயார் சந்தியா பெயரில் 14.55 ஏக்கரில் திராட்சை தோட்டம் ஆகியவற்றை ஜெயலலிதா வாங்கினார். அதைத்தொடர்ந்து 3.33 ஏக்கரில் விவசாய நிலமொன்றை வாங்கினார். இதற்கு முன்பே 1967 ம் ஆண்டு ஸ்ரீநகர் காலனியில் 14 ஆயிரம் சதுர அடியில் கட்டடத்தை வாங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. கடந்த முறை ஆர் கே நகர் தொகுதியில் நின்ற ஜெயலலிதா, தேர்தல் கமிஷனிடம் அளித்த சொத்து விபரத்தில் ஐதராபாத் சொத்துகளை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.