ஜியோவை தொடரும் வேதாந்தா பல்கலைக்கழகம்

டில்லி

ஜியோ பல்கலைக்கழகத்த்துக்கு அடுத்த படியாக மத்திய அரசு வேதாந்தா குழுமத்துக்கு பல்கலைக் கழகம் தொடங்க சிறப்பு அந்தஸ்து வழங்க உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனர் அம்பானிக்கு புதிய ஜியோ பல்கலைக்கழகம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.    இந்த பல்கலைக் கழகம் இன்னும் தொடங்கவில்லை.   ஆனால் அதற்கு முன்பே இந்தப் பல்கலைக்கழகத்துக்கு முன்னேறி வரும் சிறந்த பல்கலைக்கழக வரிசையில் மத்திய அரசு இடம் அளித்துள்ளது.   இந்த விவகாரம் நாடெங்கும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

இந்நிலையில் மற்றொரு சர்ச்சையில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிக்கி  உள்ளது.   பிரபல தொழிற் குழுமமான வேதாந்தா குழுமம் தாங்கள் தொடங்க உள்ள பல்கலைக் கழகத்துக்கு இதே அந்தஸ்து வழங்க மனு அளித்துள்ளது.     அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய ஒரு மாத அவகாசத்தை வேதாந்தா குழுமம் கேட்டுள்ளது.

அனில் அகர்வாலை தலைவராகக் கொண்ட இந்த வேதாந்தா குழுமம் நடத்தி வரும் பல தொழில்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன.    இந்தக் குழுமம் தமிழ்நாடு மாநிலத்தில் நடத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை மாசு படுத்துவதாக  மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்து துப்பாக்கி சூடு நடந்தது.   அதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.   அதன் பிறகு மாசுக் கட்டுப்பாட்டு  வாரியத்தின் உத்தரவின் பேரில் இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இது குறித்து மனித வள மேம்பட்டு துறை செயலர் சுப்ரமணியம், “ஜியோ பல்கலைக்கழகம்  சிறந்த முன்னேறும் பல்கலைக்கழகத்துக்காக அறிவிக்கப்பட அனைத்து தகுதிகளும் கொண்டுள்ளது.   ஆனால் வேதாந்தா பல்கலைக்கழகம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய கால தாமதம் ஆவதால் ஒரு மாத அவகாசம் கேட்டுள்ளது.

ஜியோ பல்கலைக் கழகம் தனது பணிகளை இது வரை தொடங்காத போதிலும் ரிலையன்ஸ் குழுமம் ஏற்கனவே  திருபாய் அம்பானி சர்வதேச கல்வி மையம், மற்றும் 15000 மாணவர்கள் பயிலும் ரிலையன்ஸ் பள்ளிகள் ஆகியவைகளை நடத்தி வருகிறது.    திருபாய் அம்பானி தகவல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிலையம் பல பட்டதாரிகளை உருவாக்கி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி