தமிழகத்தில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்!:  சமூகவலைதளத்தில் எழும் ஆதரவு

காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை சிறுமி, கடந்த ஏழு மாதங்களாக 17 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுவந்த விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கருத்தை சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டுவருகிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த காதுகேளாத, வாய்பேசமுடியாத 11 வயது சிறுமியை, தனியார் செக்யூரிட்டிகள் மற்றும் பிளம்பர் உள்ளிட்ட 17 பேர் கடந்த 7 மாதங்களாக பலாத்காரம் செய்துவந்த விவகாரம் வெளியாகி உள்ளது. அந்த சிறுமிக்கு போதை ஊசி போட்டும், மயக்க மருந்து கொடுத்தும் தங்கள் இச்சையை இவர்கள் தீர்த்து வந்திருக்கிறார்கள். சுமார் 23 வயதிலிருந்து 65 வயதுவரை உள்ள இந்த காமுகர்களின் செயல் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்ற குரல் எழுந்து வரும் நிலையில், “இதுபோன்ற பாலியல் குற்றங்கள் தீர விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்” என்றும் சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

“அந்த 17 பேரும் செய்தது மன்னிக்க முடியாத குற்றமே. கட்டாயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தண்டனை மூலமே இக்குற்றங்களைத் தடுத்துவிட முடியாது.

சமீபத்தில்தான் சென்னையைச் சேர்ந்த தஷ்வந்த் என்கிற இளைஞனுக்கு சிறுமியை பலாத்காரப்படுத்திக் கொலை செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதற்குள் இன்னொரு பலாத்கார கொடூரம் நடந்தது வெளியாகியிருக்கிறது.

ஆகவே பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிப்பது ஒருபுறம் இருக்கட்டும். இன்னொரு புறம், சமுதாயத்தில் நிலவும் பாலியல் வறுமையைப் போக்க வேண்டும்.

பாலியல் இச்சை என்பது இறக்கும்வரை ஒரு மனிதனுக்கு இருக்கும். ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல், குடும்பச் சூழல்நிலை, இதைத் தீர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்காது. வயதக்கு வந்த பிள்ளைகள் இருக்கையில் பாலியல் உறவா என்று மனைவிமார்கள் தவிர்ப்பார்கள். அல்லது மனைவிமார்களுக்க உடல் நிலை பாதிப்பு இருக்கலாம். இது போன்ற சூழலில் ஆண்களுக்கு தங்கள் பாலியல் இச்சையைத் தீர்க்க வழி வேண்டும். அதற்கு சரியான வழி, விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதுதான்” என்று பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

“விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் கா.திருத்தணிகாசலம். சமூக அக்கறைகொண்ட கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருவபர்.  பதிவுகளில் மட்டுமின்றி உண்மையிலும் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருபவர்.

இவர், “மனைவி/கணவனை இழந்தோர்.வீட்டைபிரிந்து மாதக்கணக்கில் பணிசெய்வோர் மணமுடிக்காதோர்களால் சிறுவர் சிறுமிகள் பாதிக்கப் படாமல் இருக்க  விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்” என்கிறார்.

“விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்ட நாடுகளில் பெண்களுக்கெதிரான குற்றம் குறைவு” என்று கூறுவதோடு, “விபச்சாரம் இந்திய கலாச்சாரம்” என்றும் சொல்கிறார்.

இதே போல சமூக ஆர்வலரான மானாமதுரை மருதுவும்,  “சொன்னால் தவறாக நினைக்கலாம். பாலியல் வறட்சு மிகுந்த சூழலில் அனுமதி பெற்ற விபச்சார விடுதி தேவை” என்று தயக்கத்துடன் கூறுகிறார்.

இவர்களைப்போல மேலும் பலர் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.