சென்னை:
கொரோனாவின் தாக்கம் வயதானவர்களை எளிதில் தாக்குவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், நீரழிவு, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்களை, கொரோனா தொற்று பரவலில் இருந்து  கவனமாக, பொத்தி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 86 சதவிகிதம் பேர் டயபட்டீஸ், ஹைபிரஷர்  போன்ற நோய்களின் தாக்கம் உடையவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் இன்று மேலும் 805 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17082 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில், உயிரிழப்பு 118 ஆகவும் அதிகரித்துள்ளது
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 41 அரசு மற்றும் 27 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 68 ஆய்வகங்கள் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 4,21, 480 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 88 சதவீத பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை.
பாதிக்கப்பட்டவர்களில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே அறிகுறி உள்ளது. 40% காய்ச்சல், 37% இருமல்,  10% தொண்டை வலி அறிகுறியுடன் இருப்பது  கடந்த மூன்று மாதங்களில் கொரோனா பாதிப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் எளிதில் முதியோர்களை தாக்குகிறது.  சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களை பொத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும், சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான மருந்துகளை சரியாக அளித்து மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
கொரோனாவால்  உயிரிழந்தவர்களில் 86% பேர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களே இறந்துள்ளனர்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 50 சதவீத பேர் உயிரிழந்துள்ளனர் .
இவ்வாறு அவர் கூறினார்.