சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., தொழிற்சங்கங்கள் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராடி வருகின்றனர். நேற்றைய போராட்டத்தின்போது, போலீசார் பொதுமக்கள் மீதும், போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் மீதும்  துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 12 பேர் பலியாகி உள்ளனர்.

போலீசாரின் இந்த காட்டுடமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தொழிற்சங்கத்தின்ர் போராடி வருகின்றனர்.

இன்று காலை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தற்போது சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., தொழிற்சங்கங்கள் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுபாதையில் போக்குவரத்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  போராட்டம்  அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.