இயக்குநர் கவுதமன் தலைமையில் மீண்டும் இன்று கிண்டியில் பூட்டுப் போராட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போராட்டம்..

விவசாயிகளுக்காக இன்று மீண்டும் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை நடத்தப்போவதாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் அறிவித்துள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி  அவர்களுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் அவரது தலைமையில் திடீர் போராட்டம் நடந்த்து.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு போராட்டக்காரர்க்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் கிண்டி மேம்பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக வ.கவுதமன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “இன்று ( 12-12-2017 ) காலை 10 மணிக்கு , சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு அவலுசேர்க்க ” கத்திப்பாரா மேம்பாலத்தை பூட்டு போட்டு ” மத்திய – மாநில அரசுகளின்” செவிட்டு காதுகளுக்கு விவசாயிகளின் வலியை உணர்த்த நடத்தப்பட்ட

போராட்டத்திற்காக நேர்நிற்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.