2வது நாள்: விஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்பு போராட்டம்! பிரபலங்கள் ஆதரவு

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் தன்னிச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சினிமா தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்பட பலர் இன்று 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது. சேரனுக்கு ராதாரவி, ராதிகா, எஸ்.ஏ.சந்திரசேகர், ராஜேந்தர் உள்பட முக்கிய திரையுலக பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சங்க தலைவராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வரும நடிகர்,  சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக  போட்டியிடப்போவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். தொடர்ந்து நேற்று நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதற்கு சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு பகுதியில் எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சேரன் தலைமையில், பல தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. இந்நிலையில்,  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர்களுக்க  நடிகர் ராதாரவி, நடிகை ராதிகா, இயக்குநர்கள் டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட பலர்  ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதால், தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று சேரன் தலைமையில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.