ஆஸ்திரேலியா,

ஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில், இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம் நிலக்கிர சுரங்கம் நடத்த வருகிறது. இதில் முறைகேடாக நிலக்கரி வெட்டி எடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நிலக்கடி வெட்டி எடுக்கும்  திட்டத்தை  உடனடியாக நிறுத்துமாறு போராட்டம் நடைபெற்று வருகிறது.

மோடியின் நண்பரான தொழிலதிபர் அதானியின் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவரது நிறுவனத்துக்கு மோடி அரசு பல்வேறு சலுகைகள் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதானியின் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்தியாவிலுள்ள மின் தேவைக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி எடுக்கும் வகையில், அங்கு சுரங்கம் தோண்டும் பணியில் அதானி நிறுவனம் இறங்கி உள்ளது.

இதன் காரணமாக  வடக்கு ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என அந்த நாட்டு சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்தனர். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரையில் ஆயிரக்க ணக்கான ஆஸ்திரேலியர்கள் Stop Adani என அணிவகுத்து நின்று போராடி வருகின்றனர். அதானி நிறுவனமே வீட்டுக்குப் போ ADANI GO HOME  என்றும் மக்கள் போராடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய மக்களின் இந்த போராட்டத்தினால் அதானி நிறுவனத்துக்கு எதிர்ப்புகள் வலுவடைந்து வருகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் நிலக்கிர சுரங்க திட்டத்தை அதானி குழுமம் உடனடியாக நிறுத்து வலியுறுத்தும் கடிதத்தில் அந்நாட்டு முன்னாள் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் கேப்டன் ஐயன் கிரெக் சப்பல் கையெழுத்திட்டுள்ளார். இரு தரப்பு உறவுகளையும், விளையாட்டு தொடர்புகளையும் இது பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.