காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பிரான்சில் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரான்சில் அனைத்து பிரெஞ்சிந்திய சங்கங்களின் கூட்டமைப்பு ( FAFI ) சார்பாக பாரீசில்  ஈபிள் டவர் (Eiffel Tower)  அருகே போராட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, உச்சநீதி மன்ற தீர்ப்பை வலியுறுத்த மத்திய அரசை வலியறுத்தி கோஷம் எழுப்பினர்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்துக்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், பிரான்சில் வசித்து வரும் தமிழர்கள் உள்பட இந்தியர்களின் பிரெஞ்சிந்தி கூட்டமைப்பு சார்பில் ஈபிள் டவர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, தமிழகத்தில் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் எனவே,  மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கார்ட்டூன் கேலரி