போராடுவது தேசவிரோத செயல் அல்ல

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் Ezhumalai Venkatesan முகநூல் பதிவு…

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஒரு தரப்பினர் பொதுவெளிகளில் விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள்..

ஆனால் அதே சட்டத்திற்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது தேசத்துரோகம் தேசவிரோதம் என்பதுபோல் மாற்றப்பட்டு விடுகிறது..

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு விட்டது என்பதாலேயே ஒரு சட்டத்திற்கு எதிராக யாருமே பேசக்கூடாது என்பது தவறான எண்ணம்.. சட்டத்தின்முன் தலை வணங்குவதற்கும் சட்டத்தை விமர்சிப்பதற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன..

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக ஆட்சியில், இரு தரப்புமே தங்கள் கருத்துக்களை வலுவாக சொல்வதில் சொல்வதற்கு உரிமை உண்டு..

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராடுவது தேசத்திற்கு எதிரானதாகவும் அல்லது தேச விரோதமான காரியமாகவும் கருதப்படக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் நேற்று தெள்ளத் தெளிவாக கூறி உள்ளது…

இதில் கவனமாக இருக்க வேண்டிய ஒரே விஷயம், வன்முறையைத் தூண்ட சமயம் பார்த்து காத்திருக்கும் கும்பல்களின் வலையில் எந்த தரப்புமே விழுந்துவிடக்கூடாது என்பதுதான்..

கார்ட்டூன் கேலரி