‘பன்வாரிலாலே திரும்பிப் போ:’ ஆளுநர் மாளிகை நோக்கி திமுகவினர் திடீர் பேரணி…!


சென்னை:

 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுகவின் ஆளுநர் மாளிகை நோக்கி திடீர் பேரணி ந‘டைபெற்றது.. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பேரணிக்கு எம்.எல்.ஏ;ககள். வாகை சந்திரசேகர், மா. சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை ஏற்று சென்றனர்.

பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆளுநர் தன்னிச்சையாக விசாரணை கமிஷன் அமைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பெண் செய்தியாளரின் கன்னத்தை  தட்டியதற்கும் கடும் கண்டங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருவதாகவும், தன்னிச்சையாக விசாரணை கமிஷன் அமைக்க அவருக்கு உரிமை கிடையாது என்றும் திமுக உள்பட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநரின் தலையீடு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறதா எனச் சந்தேகம் எழுகிறது என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர்  மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆளுநரின் அத்துமீறியல் செயல் காரணமாக சமூக வலைதளங்களில் பன்வாரிலாலே திரும்பிப்போ என்று ஹாஸ்டேக் டிரென்டிங்காகி வருகிறது.

இந்நிலையில், ஆளுநர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், ஆளுநர் பன்வாரிலாலை திரும்பப்பெற வலியுறுத்தியும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். சுமார்  800-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பேரணியில் சென்றனர். அவர்களை  போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்,  பேராசிரியை நிர்மலா தேவியை காப்பாற்ற ஆளுநரே விசாரணை குழு அமைத்துள்ளார் என மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. ஆனால் பெண் பத்திரிகையாளர் கன்னத்தை ஆளுநர் தட்டிக்கொடுத்தது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. மாநில உரிமையில் ஆளுநர் பன்வாரிலால் தேவையில்லாமல் தலையிடுவதாக மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார். ஆளுநர் சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டில் ஒன்றுமில்லை என்பதற்காக ஆளுநரே விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். புகாருக்கு உள்ளான ஆளுநரே விசாரணைக்கு உத்தரவிடலாமா? என சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.