எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் திருநாவுகரசர் பங்கேற்பு!

சென்னை:

விவசாயிகளுக்கு ஆதரவான எதிர்க்கட்சிகள்  போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற  ஆர்பாட்டத்தில் திருநாவுக்கரசர், கி.வீரமணி, திமுக எம்.எல்.ஏ.சேகர்பாபு, ரங்கநாதன் உள்பட விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணும் கலந்து கொண்டார்.

மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர்.

சென்னை எழும்பூரில் உள்ள  ஆதித்தனார் சாலை அருகே உள்ள  மேம்பாலம் அருகே அனைத்துக் கட்சினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வீரமணி, தமிழகம் கடும் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருகிறது என்றார்.

தொடரந்து பேசயி தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் பேசுகையில், ”மோடி  ஏன் அய்யாக்கண்ணுவைப் பார்த்து  பயப்படுகிறார். ஏன் அவரை சந்திக்க மறுக்கிறார்” என்று கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தையொட்டி அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டதால் அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.