சென்னை,

மிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில் போராட்த்தை கைவிட்டு வேலைக்கு திரும்புமாறு அரசும், சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்ட நிலையில் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு அரசு எஸ்எம்எஸ் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

ஊதிய உயர்வு, நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடை பெற்று வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 5வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், போராட்டம்  நடத்த ஏற்கனவே விதித்த தடையை நீக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்ட நிலையில், நிலுவை தொகையை உடனே வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஐகோர்ட்டு உத்தரவு குறித்து இன்று பிற்பகலில் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்ட 22 தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள்  வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்து உள்ளனர்.

மேலும், போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பணிமனைகள் முன்பு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை தொடர்ந்து,  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு மொபைல் போன்களுக்கு  குருஞ்செயலி (எஸ்எம்எஸ்) மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வரும் நிலையில் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.