பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம்….ராகுல்காந்தி எச்சரிக்கை

டில்லி:

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ உடல் பயிற்சி குறித்து விராட் கோலி விடுத்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி.

அதேபோல் பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைக்க வேண்டும். தவறினால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி அதனை செய்ய வைப்போம். உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.