ரோம்: இத்தாலியில் ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் 2வது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இத்தாலியில் மாலை 6 மணிக்கே உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து, ரோம், பலேர்மோ உள்ளிட்ட நகரங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
டுரின் பகுதியில் உள்ள ஒரு பிரபல பல்பொருள் அங்காடியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.