ந்தாவது நாளாக தமிழக இளைஞர்கள், ஜல்லிக்கட்டு தடை நீக்க போராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் கூடி போராடும் இவர்களின் முழக்கங்கள் இவைதான்.

 

தமிழன்னா யாரு?

ஜல்லிகட்டு பாரு!

 

மீசையத்தான் முறுக்கு!

பீட்டாவை நொறுக்கு!

 

அழிக்காதே அழிக்காதே!

தமிழன் அடையாளத்தை அழிக்காதே!

 

அடங்காதே! அடங்காதே!

மத்திய அரசுக்கு அடங்காதே!

 

மாத்து மாத்து!

தீர்ப்பை மாத்து!

 

வேண்டும்!வேண்டும்!

சல்லிகட்டு வேண்டும்!

 

தடைசெய்!தடைசெய் !

பீட்டாவை தடைசெய்!

 

கைது செய்!  கைது செய்!

ராதா ராஜனை கைது செய்!

 

ஒழித்திடு! ஒழித்திடு !

சென்னகிருஷ்ணனை ஒழித்திடு!

 

திருத்து! திருத்து!PCAவை திருத்து!

 

காப்போம்!  காப்போம்!

நாட்டுமாடு காப்போம்!

 

வேண்டாம்!வேண்டாம்!

ஜெர்சி மாடு வேண்டாம்!

 

வேண்டாம் வேண்டாம்!

A1பால் வேண்டாம்!

 

வேண்டும்!வேண்டும்!

A2 பால் வேண்டும்!

 

விலங்கு நல வாரியம்!

அதுக்கு செய்ய வேண்டும் காரியம்!

 

கைகூலி ! கைகூலி!

நீதிபதி கைகூலி!

 

கைகூலி ! கைகூலி!

மத்திய அரசே கைகூலி!

 

கைகூலி ! கைகூலி!

மாநில அரசே கைகூலி!

 

வேண்டும் வேண்டும்!

உரிமை வேண்டும்!

 

காப்பாற்று! காப்பாற்று!

விவசாயத்தை காப்பாற்று!

 

விவசாயி கண்ணீரு!

வேண்டுமய்யா தண்ணீரு!

 

தடைசெய்! தடைசெய்!

கோக் பெப்சி தடைசெய்!

 

குடிப்போம்! குடிப்போம்!

இளநீர் குடிப்போம்!

 

குடிப்போம் குடிப்போம்!

பதநீர் குடிப்போம்!

 

சாப்பாடு! சாப்பிடு!

வாழை இலையில் சாப்பிடு!

 

இவற்றைத் தவிர தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடி ஆகியோரை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தும் சில இளைஞர்கள் ஆங்காங்கே முழக்கமிடுவதையும் , அவர்களை பிற இளைஞர்கள் தடுப்பதையும் காண முடிகிறது.