சரத்குமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்கார்கள்

--

 

மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரகணக்கானோர் போராடி வருகிறார்கள். அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்திக்க திரைத்துறை, அரசியல் தலைவர்கள் சென்று வருகிறார்கள்.


இவ்வாறு சென்ற நடிகரும் ச.ம.க. கட்சி தலைவருமான சரத்குமாரை பேச விடாமல் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர்.
இதனால் சோகத்துடன் சரத்குமார்…எங்களது ஊரில் ஊரில் குலதெய்வ கோவிலில் வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடத்துவோம். என் தாத்தா காளையை அடக்கும் வீரர். நானும் காளை வைத்திருக்கிறேன். .
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன். எனது உணர்வு போராட்டக்காரர்களுக்கு புரியவில்லைல. ஆனாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு என்றார்.