கர்நாடகா:  கருணாநிதி மகள் செல்வி வீட்டு முன் கன்னட அமைப்பினர் போராட்டம்!

பெங்களூரு:

காவிரி பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூரு அருகேயுள்ள கருணாநிதி மகள் செல்வி வீட்டு முன்பு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

செல்வி - கருணாநிதி
செல்வி – கருணாநிதி

தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மகள் செல்வி குடும்பத்தோடு, பெங்களூருவில்  வசித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் அக்குடும்பத்தாருக்கு பெரும் சொத்துகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. சன் குழுமத்தின் கன்னட சேனலான உதயா டிவி நெட்வொர்க்குகளை செல்வி கணவர் கவனித்துக்கொள்வும் பேசப்படுகிறது.

செல்வியின் வீடு பெங்களூருவை அடுத்த, ராம்நகர் மாவட்டத்திலுள்ள கரிகாலே தொட்டி கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டின் முன்பு கன்னட அமைப்பினர் சிலர் இன்று காலை போராட்டம் நடத்தினர். இதனால் செல்வி வீட்டு முன்பு  பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

ஆனாலும் வேறு வேறு கன்னட அமைப்புகள், செல்வி வீட்டு முன் கூட முற்படுவதால் பதட்டம் அதிகமாகியுள்ளது.