சென்னையில் பொது இடங்களில் போராட்டங்கள் நடத்த தடை நீடிப்பு

சென்னை: 

சென்னையில், பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு முன் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்த காவல் துறை சார்பில் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41-வது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் இம் மாதம் 29-ஆம் தேதி வரை 15 நாள்கள் விதிக்கப்படுகிறது. அதன்படி, பொது இடங்கள், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலி, கூட்டம், பேரணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இருப்பினும் பொது இடங்களில் நடத்தப்படும் அனைத்து விதமான போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளை நடத்த நினைப்பவர்கள், 5 நாள்களுக்கு முன்னதாகவே காவல்துறைக்கு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். காவல்துறை அனுமதித்தால் நிகழ்ச்சிகளை நடத்தலாம்

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தமிழ்நாடு நகர காவல் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் சென்னை பெருநகர காவல்துறையில் அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.