மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 2 வீரர்கள் கறுப்புக்கொடி காட்டி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் மடக்கி கைது செய்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டி நேற்று தொடங்கியது. முதன்போட்டியாக மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்று (நேற்று) போட்டிகள் கொரோனா நெறிமுறைகளின்படி, விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த போட்டி நடைபெற்றிருக்கொண்டிருந்தபோது, 2 மாடுபிடி வீரர்கள், மைதானத்தில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கறுப்புக்கொடியுடன் கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விரைந்துவந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும்  அழைத்துச்சென்று கைது செய்தனர்.