ஐபிஎஸ் மகனுக்கு பெருமையுடன் சல்யூட் அடித்த கான்ஸ்டபிள் அப்பா!

--

திருவள்ளுவர் சொல்லியபடி தன் மகனை அவையத்து முந்தி இருகச் செய்திருக்கிறார் கான்ஸ்டபிள் ஜனார்தன்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள விபுதிகந்த் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்தன் சிங். இங்குள்ள  காவல் நிலையத்தில் காவலராக (கான்ஸ்டபிள்) பணிபுரிகிறார்.

இவர் தனது மகன் அனுாப் குமார் சிங் கல்வி குறித்து கூடுதல் அக்கறை கொண்டு செயல்பட்டார்.  அனூப்புக்கு பொருளாதார தகுதியை மீறி தரமான கல்வியை அளித்தார். அனூப்பும் சிறப்பாக படித்து கடந்த  2014ல் நடந்த ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை அதிகாரி ஆனார். அவரது தந்தை

கான்ஸ்டபிளாக பணிபுரியும் காவல் நிலையத்தை உள்லடக்கிய ஜனார்தன் சிங் இந்த ஸ்டேஷனை உள்ளடக்கிய லக்னோ பகுதிக்கு கடந்த சனிக்கிழமை உயர் அதிகாரியாகப் பொறுப்பேற்றார், அனூப் குமார் சிங் ஐபிஎஸ்.

 

அதுமட்டுமல்ல.. தந்தை பணியாற்றும் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்காக சென்றார். அப்போது கடமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அனுாப் குமாருக்கு, சல்யூட்  அடித்து வரவேற்றார் தந்தை ஜனார்தன் சிங்க

இது ஏதோ திரைப்பட காட்சி போல இருந்தது  என்கிறார்கள் அங்கிருந்த காவலர்கள்.

இது குறித்து அனுாப் குமார் கூறும்போது, “என் அப்பா கடுமையான உழைப்பாளி. என்னையும், என் தங்கை மதுவையும் மிதவண்டியில் பள்ளிக்கு அழைத்துச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. எவ்வளவுதான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும், எங்கள் படிப்புக்கு அவர் குறையே வைக்கவில்லை. உரிய நேரத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்திவிடுவார்..  தேவையான புத்தகங்கள் அனைத்தையும் வாங்கித்தருவார்.  அவரது பணி காரணமாக மாதக் கணக்காக வெளியீர் சென்றாலும், எங்கள் படிப்பு பற்றி அக்கறையுடன் விசாரித்தபடியே இருப்பார்.  அவரது முயற்சியால், ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாகி இருக்கிறேன்” என்றார்.

தந்தை ஜனார்தன் சிங் கூறும்போது, “எனக்கு கடமைதான் முக்கியம். அதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்பேன். . எங்கள் இருவர் இடையிலான உறவு பணியை பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.