டில்லி:

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங்குக்கு உயர் பாதுகாப்பு அளிக்குமாறு ஹரியானா அரசுக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், ‘‘ராம் ரஹீம் சிங் சாமியாருக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்ட பிறகு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங்குக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நுண்ணறிவு பிரிவு அறிக்கைகளை ஆய்வு செய்து அந்த நீதிபதிக்கு சிஆர்பிஎப் அல்லது சிஐஎஸ்எப் போன்ற மத்திய படை பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.’’ என்றார்.

பாலியன் பலாத்கார வழக்கில் சாமியார் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு கூறியதை தொடர்ந்து ஹரியானா, பஞ்சாப், டில்லி உள்ளிட்ட மாவட்டங்களில் கலவரம் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கண க்கானோர் காயமடைந்துள்னர்.

சாமியாரின் ஆதரவாளர்கள் பொதுச் சொத்துக்களையும், வாகனங்களையும் தீயிட்டு எரித்தனர். வருமான வரித்துறை அலுவலகம், பெட்ரோல் பங்க், 2 ரெயில் நிலையங்கள் ஆகியவை பஞ்சாப் மால்அவுட் மற்றும் பாலுவானா ஆகிய பகுதிகளில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

சாமியாரின் ஆதரவாளர்கள் பஞ்சாப், டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் சில பகுதிகளிலும் உள்ளனர். டில்லி ஆனந்த விகார் ரெயில் முனையத்தில் ரெவா எக்ஸ்பிரஸ் ரெயில் 2 காலி பெட்டிகள் தீ க்கிரையாகியுள்ளது.