கர்நாடகாவில் 24 மணி நேரமும் மளிகைக் கடை திறந்திருக்கும் : டிஜிபி அறிவிப்பு

பெங்களூரு

கூட்டம் கூடுவதை தவிர்க்கக் கர்நாடகாவில் 24 மணி நேரமும் மளிகைக்கடை உள்ளிட்டவைகளை திறந்து வைக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விற்கும் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மக்கள் இந்த கடைகள் மூடுவதற்குள் பொருட்களை வாங்க வருவதால் கூட்டம் அதிகமாகி உள்ளது.

எனவே கர்நாடக காவல்துறை துணை இயக்குநர் ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி மளிகை காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விற்கும் கடைகள் அனைத்து தினங்களும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

இது நாட்டில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கார்ட்டூன் கேலரி