ரசியலுக்கு வரப்போவதாக தனது  ரசிகர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, தனது படத்தை, வெற்றிப்படமாக ஓட வைத்து, கல்லா கட்டி வந்த நடிகர் ரஜினிகாந்தின் உண்மையான  சொரூபம் இன்று வெளிப்பட்டு உள்ளது. அவரது ரசிகர்களின் கனவில் மண்ணை வாரிப்போட்டுள்ளது.

தமிழ் ரசிகர்கள் ஏமாளிகள் என்பதை அவரது இன்றைய அறிவிப்பு நிரூபித்து உள்ளது. மொத்தத்தில் தமிழக மக்களிடையே பரபரப்பான ஏற்படுத்திய ரஜினி, தான் ஒரு போலியான மனிதன் என்பதை  நிரூபித்துள்ளார். இன்று  தனது சுயரூபத்தை வெளிக்காட்டி உள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடங்களை சுட்டிக்காட்டி,  மக்களிடையே அனுதாபத்தை பெறும் நோக்கில் பஞ்ச் டயலாக் பேசி வந்த ரஜினி, ஆன்மிக அரசியல் என்ற பெயரில் கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது மட்டுமின்றி, கடந்த சில நாட்களுக்கு முன்பு 2021 ஜனவரியில் கட்சி தொடங்கப்போவது உறுதி என்றும் அறிவித்தார். ஆனால், இன்று, கட்சி தொடங்க முடியாத சூழல் உருவாகி உள்ளதாக, தனது உடல்நிலையை காரணம் காட்டி அறிவித்து  உள்ளார்.

தனது இளமை காலம் முதல் தமிழ் ரசிகர்களின் ஆதரவினால் திரையுலகில் கோலோச்சி,  கோடிக்கணக்கான ரூபாய் கல்லா கட்டிய ரஜினி இன்று, தான் ஒரு  பசுத்தோல் போர்த்திய கன்னட புலி என்பதை என்பதையும், தமிழர்கள் ஏமாளிகள் என்பதையும், அரசியலுக்கு வரமாட்டேன் என்ற அறிவிப்பு மூலம் மீண்டும் நிரூபித்து உள்ளார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு அவர் ஏற்கனவே அறிவித்தபடி, 31ந்தேதி வெளியிடுவாரா என்ற சந்தேகம் நீடித்து வந்த நிலையில், அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினி. அதில், தனது உடல்நிலையை காரணம் காட்டி ஒப்பாரி வைத்துள்ளார்.

எம்ஜிஆரைப்போல கட்சியை அறிவித்து, ஆட்சிக்கட்டிலில் ஏறிவிடலாம் என்று கனவு கண்ட ரஜினி, தற்போதைய அரசியல் கள நிலவரம் என்ன என்பதுடன், தனது வயது 71 என்பதையும்  மறந்துவிட்டது, தற்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான், அவரது திடீர் ஞானோதயம்.

அதுக்கு அவர் சரிபடமாட்டார்: ரஜினியின் அரசியல் குறித்த செய்தி

ரஜினியின் அறிக்கையில் இருப்பது என்ன?

“என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக் குழுவினருக்கு தினமும் கரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக் கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாகப் படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது, அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.

என் உடல்நிலை ௧ருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை. இதை ஆண்டவன் எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.

நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கித் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள்.

நான் மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி, பிரச்சாரத்திற்குச் சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

அதுக்கு அவர் சரிபட மாட்டார்: ரஜினிகாந்த் அரசியல்  குறித்து மக்களின் மனநிலை

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் Immuno Suppressant மருந்துகளைச் சாப்பிடும் நான், இந்த கரோனா காலத்தில் மக்களைச் சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்.

மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்திருக்கின்றீர்கள், அது வீண் போகாது. அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்.

கடந்த நவம்பர் 30 – ம் தேதி நான் உங்களைச் சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக ‘உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்குச் சம்மதமே’ என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போலச் செயல்படும்.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்றச் சம்மதித்த அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை.

உண்மையையும், வெளிப்படைத் தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்து உள்ளார்.

ரஜினியின் உடல்நிலை குறித்து, அவருக்கு இப்போதுதான் தெரிந்ததோ? ஏற்கனவே ரஜினி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.  இருந்தாலும், அவரது பண ஆசை அவர் திரையுலகில் இருந்து ஓய்வுபெற அனுமதித்ததா.  இல்லையே…  தள்ளாத 71 வயதிலும் படத்தில் நடித்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவரை விட்டதா இல்லையே… பிறகு, ரஜினி எப்படி ஆன்மிக ஆரசியல் தொடங்க முடியும், அவர் ஆன்மிகவாதி என்று கூற முடியும்.

ஆன்மிகவாதியாக இருப்பவன், சுக துங்கங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும். ஆனால், ரஜினி அப்படியா வாழ்ந்தார். மக்களை ஏமாற்றவே அவர்   அவ்வப்போது தன்னை ஆன்மிகவாதியாக காட்டி ஏமாற்றி வந்துள்ளார்.

தன்னை  யோக்கினாகவும், சொத்து சுகம் இல்லாத பாபா போன்று  ஆன்மிகவாதியாக படத்தில் நடித்தும், தனது ரசிகர்களிடையே ஆசை தூண்டி வந்த ரஜினி, ஒரு மொள்ளமாரி என்பது இப்போது அம்பலமாகி உள்ளது.  தனது படத்தை ஓடவைக்கவும்,  தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கிலேயே  இதுபோல மாய்மாலங்களை உருவாக்கி இருப்பதும்,  இமயமலைக்கு செல்வது போன்ற பிம்பத்தையும், ஆன்மிக அரசியல் என்ற பெயரில் தமிழக மக்களிடைய, திருத்தனமாக நம்பிக்கையை உருவாக்கி வந்துள்ளதும், இன்றைய அவரது அறிவிப்பின்மூலம் வெளிப்பட்டு உள்ளது. 

மனைவி ‘லதா’வையே மாற்ற முடியாத ரஜினிகாந்தால், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

ஏனென்னால் ரஜினியின் மனைவி லதாமீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பல முறை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தால் கடுமையாக எச்சரிக்கப் பட்டதும்,  கோச்சையான் படத்துக்கு வாங்கிய கடனை இதுவரை அடைக்காத ஏமாற்றுவித்தையுடன், சென்னை மாநகராட்சி வரியை எதிர்த்து நீதிமன்றம் சென்று குட்டு வாங்கியது போன்ற நிகழ்வுகளும் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்ததுதானே.

இப்படிப்பட்ட ஒருவரை (ரஜினியை)  எப்படி ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அவரது ரசிகர்கள் ஏற்க முன்வந்தால்கள் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. 

தமிழக மக்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் என்பதை தெரிந்துகொண்ட ரஜினி,  ரசிகர்களை சுலமாக ஏமாற்றும் நோக்கில்தான் அரசியல் குறித்த அறிவிப்பை கூறி, தனது படங்களை வெற்றிப்படமாக்கி வந்துள்ளதும், தற்போது வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதை தெரிந்து கொண்டு,  அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தமிழக மக்கள், ரசிகர்கள் ஏமாளிகள் என்பதை அவரது இன்றைய அறிவிப்பு வெளிக்காட்டியுள்ளது.

மொத்தத்தில்  ரஜினி  அவரது ரசிகர்களுக்கு அல்வா கொடுத்துள்ளார்.