சென்னை:

ரும் 31ந்தேதி விண்ணில் பாய இருக்கிறது பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட். இதற்கான கவுண்டவுன் நாளை தொடங்குகிறது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது.

ஏற்கனவே செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய செயற்கை கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதன் காரணமாக  1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

இந்த செயற்கை கோள்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் வருகிற 31-ந் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதற்கான அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து விண்ணில் செலுத்த தயார் நிலையில் உள்ளது. இதற்காக கவுண்டவுடன் நாளை தொடங்குவதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

நாளை  பகல் 1.59 மணிக்கு தொடங்கி 31-ந் தேதி மாலை 6.59 மணிக்கு நிறைவடைந்த உடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் .

இந்த செயற்கை கோள்  மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

இந்த செயற்கை கோள்  இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.