ஸ்ரீஹரிகோட்டா:

ன்று காலை பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம்  விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட்-3 உள்பட 14 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக  இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ராணுவ ஆய்வுகளுக்கு உதவுவதற்காக ‘கார்டோசாட் – 3’ செயற்கைகோள் வடிவமைத்து, இன்று வெற்றிகரமாக விண்ணில்  செலுத்தியது.  அதனுடன் அமெரிக்காவின் 13 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. – சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து இன்று காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளில்,  மேகக் கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக படமெடுக்கும் வகையிலான காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இன்று காலை 9:28 மணிக்கு விண்ணில்பாய்ந்த கார்டோசாட் 3 உள்பட அனைத்து  செயற்கைக் கோள்களும், அதற்கான புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும், கார்டோசாட் செயற்கை கோள்,  புவியில் இருந்து 509 கி.மீ தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரோ அறிவித்து உள்ளது.

கார்டோசாட் உட்பட 14 செயற்கைக் கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சதீஷ் தவான் மையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகள் கைகொடுத்து ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.