ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி சி 50 CMS-01 ராக்கெட்டானது வரும் 17ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தகவல்தொடர்பு செயற்கை கோளான CMS -01 செயற்கை கோளை தாங்கிச் செல்லும் பி.எஸ்.எல்.வி-சி 50 ராக்கெட்டானது பி.எஸ்.எல்.வியின் 52வது ராக்கெட்டாகும்.

இந்தியாவின் 42வது தகவல் தொடர்பு செயற்கை கோளான CMS-01 ஆனது தகவல்தொடர்புக்காகவும், நிலப்பரப்பு ஆய்வுக்காகவும் அனுப்பப்படுவதாக இஸ்ரோ கூறி உள்ளது.

வானிலை சாதகமாக இருக்கும்பட்சத்தில் வரும் 17ம் தேதி மதியம் 3.41 மணியளவில் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.