டெல்லி:  கடனுக்கான மாத தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக வங்கிகள் அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதை  தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் கடந்த வாரம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவித்த ஆர்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ், மார்ச் 1ம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பது தொடா்பான முடிவுகளை எடுக்க அனைத்து வங்கிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந் நிலையில், பொதுத் துறை வங்கிகள் அது பற்றிய அறிவிப்பை இன்று முறையாக வெளியிட்டுள்ளன. இது தொடர்பான  தகவல்களை தங்களது வங்கிக் கிளைகளுக்கு தெரிவித்திருப்பதாகவும், வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும்படியும் அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியானது, மார்ச், ஏப்ரல், மே மாத கடன் தவணைகளை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோன்ற அறிவிப்பை யூனியன் பாங்க் இந்தியா அறிவித்து உள்ளது.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள டுவிட்டரில், கொரோனா பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் தரும் வகையில், கடன்களுக்கான மாத தவணைகளை நிறுத்தி வைப்பதாக கூறி உள்ளது.

ஐடிபிஐ வங்கியானது இதே அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த பதிவில், பணத்தை யாரால் செலுத்த முடியும் என்றால் அவர்கள் வங்கி கிளையில் பணத்தை செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

கனரா வங்கியானது வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாத தவணை செலுத்த மே 31 வரை கால அவகாசம் தரப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பை குறுந்தகவல் மூலமாக தெரிவிக்கப்பட்டு விட்டது என்று கூறி இருக்கிறது.

ஐஓபி வங்கியானது, கால கடன்களுக்கான ஈஎம்ஐ கொடுப்பனவுகளை ஒத்திவைத்தது மட்டுமல்லாமல், அதன் ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 8 சதவீதத்தில் 7.25 ஆக குறைத்துள்ளது. சிண்டிகேட், இந்தியன் வங்கிகளும் கால அவகாசத்தை தந்திருக்கிறது.

யூகோ வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாடிக்கையாளர்கள் ஜூன் மாதம் தவணை செலுத்தினால் போதும். கடன் தொகை செலுத்த விரும்புவர்கள் பணத்தை கட்டலாம் என்றும் தெரிவித்துள்ளது. சென்டிரல் பாங்க் ஆப் இந்தியாவானது,