ஜனவரியில் வெளியாகிறது உதயநிதியின் ‘சைக்கோ’ …!

மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர் ராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. மனநல பாதிப்பு தொடர்பான தலைப்புக்கு அனுமதியில்லை என்று தணிக்கை குழு தெரிவித்துள்ளார்கள்.

இதனால், மறுதணிக்கைக்குச் சென்றது ‘சைக்கோ’ படக்குழு. றுதணிக்கைக்குச் சென்று தலைப்பை உறுதி செய்துவிட்டாலும், என்ன சான்றிதழ் என்பதை இன்னும் தணிக்கை அதிகாரிகள் எழுத்து வடிவில் கொடுக்கவில்லை.

இதனால், டிசம்பர் 27-ம் தேதி ‘சைக்கோ’ வெளியாக வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இறுதியில், படக்குழுவினர் ஜனவரி 24-ம் தேதி ‘சைக்கோ’ வெளியாகும் என்று அறிவித்துள்ளது.