பப்ஜி இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தொடக்கம்: இந்தியாவில் மீண்டும் வருகிறதா பப்ஜி?

டெல்லி: பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் பப்ஜி இந்தியா லிமிடெட் என நிறுவனம் தொடங்கியுள்ளதையடுத்து, விரைவில் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியாவில் பப்ஜி கார்ப்பரேஷன் பப்ஜி இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இதையடுத்து , விரைவில் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

புதியதாக அறிமுகமாக உள்ள பப்ஜியில், இந்திய தன்மைக்கு ஏற்ப பல வசதிகள் மேம்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தடை விதிக்கப்படுவதற்கு முன்பு இருந்தததைவிட, பல மாற்றங்கள் செய்யபட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அநேகமாக, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகமாகலாம் என்று தகவல்கள் வெளியாகிய்ள்ளன.