சென்னை:

மிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் மகள் செல்வி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தனது மகளின் கணவருக்கும் (மருமகன்) தங்களுக்கும் எந்தவித ஒட்டும், உறவும் இல்லை என்ற பத்திரிகை மூலம் விளம்பரம் கொடுத்துள்ளார். இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி. இவரது மகள் எழிலரசி. மருத்துவரான இவருக்கும், அவருடன் படித்த டாக்டர் வி.எம்.ஜோதிமணி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை ஏற்க செல்வி மற்றும் அவரது உறவினர்கள் மறுத்து வந்த நிலையில், பேத்தி எழிலரசியின் தொடர்ந்து வேண்டுகோளை ஏற்று, அவரது தாத்தா கருணாநிதி இரு தரப்பினரிடமும் பேசி, சமூகமாக மணமுடித்து வைத்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான பத்திரிகை விளம்பரம் ஒன்றில், மகள் எழிலரசியின் கணவரான வி.எம்.ஜோதிமணி என்பவருக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த விளம்பரத்தில்,  எங்கள் மருமகன் டாக்டர் வி.எம்.ஜேதிமணி (த.பெ.முருகேசன் செட்டியார்) அவர்களின் எந்த செய்லகளுக்கும், நடவடிக்கைகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவற்றிற்கு நாங்கள் பொறுப்புமல்ல. எனவே இந்த பொது அறிவிப்பின் மூலம் டாக்டர் வி.எம்.ஜேதிமணி அவர்களின் எந்த செய்லகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு, திருமதி. செல்வி செல்வம், திரு.செல்வம் என விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விளம்பரம் பல தரப்பினரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. காதலுக்கு பச்சைக்கொடி காட்டி வரும் கருணாநிதி குடும்பத்தில் இருந்து இப்படி ஒரு விளம்பரமா? என யோசிக்க வைத்துள்ளது.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே தனது மகள் எழிலரசி காதலித்து திருமணம் செய்தார்கள் என்ற காரணத்திற்காக, மகளையும் மருமகனையும் பொதுஅறிவிப்பின் மூலம் கழற்றி விட்ட கருணாநிதியின் மகள் செல்வியின் செயல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலப்பு திருமணத்துக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து, சமத்துவத்தை பேணுவதில் தீவிரம் காட்டிய மறைந்த முதல்வர் கருணாநிதியின் வாரிசு, இன்று தனது மகள் காதல் திருமணம் செய்துகொண்டதற்காக, அவரது குடும்பத்துக்கும்,  தங்களது குடும்பத்துக்கும் எந்தவித ஒட்டும், உறவும் இல்லை என்று பத்திரிகை வாயிலாக விளம்பரம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.