சென்னை:

மிழகத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தேர்வை 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர்  இந்த பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

தமிழகத்தில் நடப்பு 2019-20 கல்வியாண்டிற்கான பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று (பிப்.4) தொடங்கியது. மாணவ மாணவியர்கள், தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறைக்கைதிகள் என சுமார் 8.32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

இன்று தொடங்கிய தேர்வு  வருகிற 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.  தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது.

இந்த பொதுத்தேர்வை,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த  7 ஆயிரத்து 400  பள்ளிகளில் படித்து வரும்,8 லட்சத்து 26 ஆயிரத்து 119 மாணவ மாணவிகளுரம்,  6 ஆயிரத்து 356 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் தேர்வுகளை எழுதுகின்றனர்.‘

தேர்வுக்காக  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத தேவையான வசதிகள் மற்றும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வின் போது முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்கள் காப்பியடிப்பதை கண்காணிக்கவும் சுமார் 44,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.