சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தேதி அட்டவனையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் , தளர்வுகள் காரணமாக முதல்கட்டமாக 10, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 19ந்தேதி  பள்ளிகள் தொடங்கப்பட்டன. பின்னர்,  9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு  வகுப்புகள் தொடங்கப்பட்டன.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பாடத்திட்டங்களும் 40 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. மேலும் செய்முறை வகுப்புகளும், வாரத்தில் இரண்டு நாக்ள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் தற்போது பிளஸ்-2 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை   பொதுத்தேர்வு தேதிக்கான அட்டவனையை வெளியிட்டு உள்ளது.

பொதுத்தேர்வானது மே மாதம் (03.05.2021) 3ந்தேதி  அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்வானத  காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்

காலை 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாள் வாசிப்பதற்கும், 10.10 முதல் 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்குகிறது.