சென்னை:

னைத்து மாநிலங்களிலும் 5ம்வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவி களுக்கு பொதுத்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும்  மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில், இந்த கல்வி ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் மத்திய அரசு கல்வித்துறை தொடர்பான விதிகளை மாற்றி, 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. தமிழக அரசும் உடடினயாக இது அமல்படுத்தப்படாது என கூறியிருந்த நிலையில், தற்போது மத்தியஅரசின் அறிவுறுத்தலை ஏற்று, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர் களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை  தரப்பில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,சுற்றறிக்கை அனுப்பப்பபட்டு உள்ளது.

அதில்,  மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை

தனியார் பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர் களுக்கு ரூ.50 தேர்வு கட்டணமும்,   8-ம் வகுப்பு மாணவர்கள் ரூ.100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணிநேரம் நடைபெறும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.