Random image

‘சர்க்கார்’ சர்ச்சை: புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.10 கோடி வழங்க உத்தரவிட கோரி பொதுநலன் வழக்கு

சென்னை:

டிகர் விஜய் நடித்து வரும்  ‘சர்க்கார்’ படத்தின் சர்ச்சை தொடர்ந்து வருகிறது.  அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.10 கோடி வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற படத்துடன், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  கடந்த மாதம் 21ம் தேதி விஜய் பிறந்தநாளை யொட்டி வெளியிட்டது. இதில், விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.  இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது/

இந்த காட்சி தொடர்பாக, நடிகர் விஜய்,  இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ்சுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ்  அனுப்பி உள்ளது.

அதில், சர்க்கார்  நடிகர் விஜய் புகை பிடித்தபடி  இருக்கும்  பட போஸ்டர்களை உடனடியாக இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சம்பந்தப்பட்ட புகைப்படங்களை உடனடியாக அகற்றாவிட்டால், அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்க்கார் போஸ்டருக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழங்கி பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கில், சர்க்கார் படத்தின் நடிகர் விஜய், இயக்குனர் ஏஆர்.முருகதாஸ், சன்பிக்சர்ஸ் ஆகியோர் தலா ரூ.10 கோடி அரசு ராயப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சர்க்கார்’ சர்ச்சை: புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.10 கோடி வழங்க உத்தரவிட கோரி பொதுநலன் வழக்கு